சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தை சந்தித்தது. கடந்த வியாழக்கிழமை மட்டும் சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 குறைந்த தங்கம் விலை, அதன் பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்தது. தங்கம் விலை நேற்று முன்தினம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறந்து ஒரு சவரன் ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/low-gold-prices-what-is-the-situation-today




