டெல்லி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ஜி ஜின்பிங் சீனா புறப்பட்டு சென்றார். பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தியா தலைமை ஏற்றுள்ள இந்த உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டில் நேற்று ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 2 நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சீனா புறப்பட்ட ஜி ஜின்பிங் இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று சீனா புறப்பட்டு சென்றார். நேற்று இரவு பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து ஜி ஜின்பிங் இன்று சீனா புறப்பட்டு சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/xi-jinping-leaves-india-after-brics-summit




