சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு. அவருக்கு பதிலாக நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா மாணிக்கம் தாகூர் எம்.பி. புதிய மாநிலத் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாணிக்கம் தாகூர் பதவியேற்கும் விழா நடைபெற்றது. செயற்குழுக் கூட்டம் இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திற்கு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-congress-party-working-committee-meeting-tomorrow




