சென்னை, தாய்லாந்தில் சென்னைக்கு வரும் விமானத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 6 கிலோ கஞ்சா தகவலின் அடிப்படையில் நேற்று தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 2 வடமாநில பெண்கள் 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பெண்களையும் போலீசிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 6 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பெண்களும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/6kg-hydroponic-cannabis-seized-at-chennai-airport




