தேனி, தேனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் வேந்தர் பாலா (வயது 50). தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆவார். இவருடைய முதல் மனைவி ராஜலட்சுமியின் மகன் ஸ்ரீகாந்த் (20). கடந்த 2023-ம் ஆண்டு தந்தையிடம் சொத்து கேட்டு ஸ்ரீகாந்த் அடிக்கடி தகராறு செய்ததால் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது. சி.பி.சி.ஐ.டி. இந்நிலையில், செப்டம்பர் 2023-ல் ஸ்ரீகாந்த் திடீரென மாயமானார். மகன் மாயமானது குறித்து தாயார் ராஜலட்சுமி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட் டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்ரீகாந்திற்கு தேனியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (25) என்பவருடன் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி வாக்குமூலம் இதையடுத்து அலெக்ஸ்பாண்டியனை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரும், வேந்தர்பாலா மற்றும் முல்லைநகரை சேர்ந்த கருப்பையா ஆகியோரும் சேர்ந்து ஸ்ரீகாந்தை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி முல்லைப்பெரியாற்றில் வீசியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில் வேந்தர்பாலாவை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரும் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தார். மகனால் ஆபத்து இதுதொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவல்படி, “வேந்தர்பாலா 3 திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் மகனான ஸ்ரீகாந்த், தன்னையும், தனது தாய் மற்றும் அக்காக்களையும் நிர்கதியாக விட்டுச் சென்றது தொடர்பாக வேந்தர்பாலாவிடம் கேட்டதோடு, அவர் பெயரில் உள்ள சொத்தை தங்களுக்கு கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் வேந்தர்பாலா ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மகனால் ஆபத்து இருப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனால் மகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். தன்னுடைய நண்பரான கருப்பையா மூலம், ஸ்ரீகாந்தை தொடர்பு கொண்டு அவருக்கு ஓட்டுனர் உரிமம் பெற்று கொடுத்து, ஆட்டோ வாங்கி தருவதாக ஆசை காட்டினார். கழுத்தை நெரித்து கொலை அதன்பேரில் சம்பவத்தன்று இரவு கருப்பையா, ஸ்ரீகாந்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தேனி அருகே வயல்பட்டி முல்லைப்பெரியாற்று படுகைக்கு அழைத்து சென்றார். அங்கு வேந்தர்பாலாவும், ஸ்ரீகாந்துடன் ஏற்கனவே முன்விரோதம் கொண்டிருந்த அலெக்ஸ்பாண்டியனும் வந்தனர். இந்த முன்விரோதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள கருப்பையா அழைப்பின்பேரில் அலெக்ஸ்பாண்டியன் அங்கு வந்திருந்தார். கைது பின்னர் அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது ஸ்ரீகாந்தை துண்டால் கழுத்தை நெரித்து அவர்கள் கொலை செய்தனர். உடலை அப்படியே விட்டால் மாட்டி கொள்வோம் என்பதால், இறைச்சி வெட்டும் கட்டை கத்திகளை அங்கு கொண்டு வந்தனர். அன்று இரவே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டு சென்று விட்டனர். தற்போது விசாரணையில் சிக்கி கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேந்தர்பாலா, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தநிலையில், தலைமறைவான கருப்பையாவை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/horoscope-linked-tragedy-father-kills-son-and-dumps-body-in-river




