புதுடெல்லி நாட்டில் பயங்கரவாதம், நக்சலிசம் போன்று வினாத்தாள் கசிவு விவகாரமும் தீர்க்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்குர் கூறினார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான அனுராக் தாக்குர் இன்று பேசினார். அப்போது அவர், நாட்டின் இளைஞர்களின் குரலை பிரதமர் மோடி கேட்கிறார். அவர்களின் விசயங்களில் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார் என்று கூறினார். வினாத்தாள் கசிவு விவகாரம் நீட் வினாத்தாள் கசிவு பற்றி பேசிய அவர், வினாத்தாள் கசிவு விவகாரம் தீர்க்கப்படும். பயங்கரவாதமும், நக்சலிசமும் பல தலைமுறைகளாக நம்மை பாதித்தது. அவை இரண்டும் பிரதமர் மோடியின் அரசால் தீர்க்கப்பட்டன. வினாத்தாள் கசிவு விவகாரமும் இதே முறையில் தீர்க்கப்படும் என்றார். சமீபத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். நீட் மறுதேர்வு இதனை குறிப்பிட்டு கடுமையாக சாடிய எம்.பி. அனுராக் தாக்குர், நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற முடிவை எங்களுடைய அரசு எடுத்தது. அதன்படி, ஜூன் 21-ந்தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதுவே இளைஞர்களின் நலனுக்கான எங்களுடைய உள்ளார்ந்த செயல்பாடு ஆகும் என்று கூறினார். பதவி விலகல் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி மந்திரியாக பதவி வகித்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த 20-ந்தேதி பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதில், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/terrorism-naxalism-question-paper-leak-will-be-resolved-anurag-thakur




