மெல்போர்ன், 2027-ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் நான் விளையாடுவேனா என்பதே தனக்குத் தெரியவில்லை என்று ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது, 2027 ஆஷஸ் தொடரில் நான் விளையாடுவேனா என்பதே எனக்குத் தெரியவில்லை. கடந்த சில காலமாகவே ஒவ்வொரு தொடராகத்தான் எனது எதிர்காலத்தைப் பற்றி முடிவு செய்து வருகிறேன். அந்தத் தொடருக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. அங்கு ஒரு ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் அல்லது வென்றிருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். “சவாலான ஆடுகளங்களில் விளையாடும்போது, அதற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு ரன்கள் குவிப்பதற்கான பல்வேறு வழிகளை கண்டறிந்துள்ளேன். அணிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பங்களிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ரன்கள் எடுப்பது, கேட்ச்களைப் பிடிப்பது, தேவைப்படும் நேரங்களில் தலைமைத்துவப் பொறுப்புகளில் உதவுவது என அணிக்கு முழுமையாக பங்களிக்க முயற்சித்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளன. என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/i-dont-know-if-i-will-play-in-the-2027-ashes-series-smith




