மதுராந்தகம், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது, 2026-ம் ஆண்டை தமிழகத்துக்கு கிடைத்த சுதந்திர ஆண்டாக ஒரு பெண் குறிப்பிட்டதாகவும், அதற்கு காரணம் தங்கள் தலைவர் என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:- யார் என்ன பிரச்சினைகளை கூறினாலும் சிரித்த முகத்துடன் அதை மரகதம் குமரவேல் சரி செய்து தருவார். நான் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தொகுதிக்குள் செல்லும்போது ஒரு பெண், ‘1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது; 2026-ல் தான் தமிழகத்திற்கு சுதந்திரம் கிடைத்தது’ என்று கூறினார். அதற்கு காரணம் நம் தலைவர். தவெகவின் கோட்டை வேட்பாளர் என்றால் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர் அல்ல. மக்கள் எப்போது அழைத்தாலும் அவர்களை சந்திக்க வருபவராக இருக்க வேண்டும். பதவி என்பது அதிகாரம் அல்ல, மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பாகும். மதுராந்தகத்திற்கு புதிய நம்பிக்கை தேவைப்படுகிறது. அந்த நம்பிக்கையின் பெயர் மரகதம் குமரவேல் ஆகும். மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/madhurantakam-constituency-should-be-transformed-into-a-stronghold-of-tvk-minister-anand




