காலே, இலங்கைக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் காலேயில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணியை தோற்கடித்த உற்சாகத்தோடு இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். காலேயில் நாளை தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 3 இடதுகை சுழற்பந்து வீச் சாளர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் சூசகமாக தெரிவித்துள்ளார். மோர்கல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- குல்தீப் யாதவ் ஆக்ரோஷமாக பந்து வீசக்கூடியவர். அவரது அனுபவத்தையும், திறமையையும் நாம் ஒதுக்க முடியாது. மானவ் சுதர் பந்தை சற்று அதிகமாக திருப்பக்கூடியவர். ரவீந்திர ஜடேஜா துல்லியமாக பந்து வீசக்கூடியவர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமான பாணியை கொண்டிருக் கிறார்கள். எனவே இந்த மூன்று இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினாலும், அது எங்களுக்கு பெரிய அளவில் கவலைக்குரிய விஷயமாக இருக்காது என்று கருது கிறேன். கேப்டன் சுப்மன் கில் அவர்களை குறிப்பிட்ட நேரத் தில் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதே முக்கியம். திற மையின் அடிப்படையில் பார்த்தால், அவர்களால் எதிரணி யின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். பாரம்பரியமாகவே காலே ஆடுகளத்தின் தன்மையை பார்த்தால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காணுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு மோர்கல் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/test-match-against-sri-lanka-three-left-arm-spinners-in-the-indian-squad




