பெங்களூரு, துனியா விஜய்யின் மனுவை ஏற்று விவாகரத்து வழங்கிய, கோர்ட்டு நாகரத்னாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்றும், அடுத்த 3 மாதங்களுக்குள் இந்த பணத்தை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துனியா விஜய். இவரது முதல் மனைவி நாகரத்னா. இவர்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் துனியா விஜய் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2024-ம் ஆண்டு தீர்ப்பு கூறிய குடும்ப நல கோர்ட்டு, துனியா விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் துனியா விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் டி.கே.சிங், சாந்திபூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் துனியா விஜய்யின் மனுவை ஏற்றுக் கொண்டு அவருக்கு விவாகரத்து வழங்கியது. குழந்தைகளின் பராமரிப்பு இதில் நாகரத்னாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்றும், அடுத்த 3 மாதங்களுக்குள் இந்த பணத்தை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 3 குழந்தைகளின் பராமரிப்பு செலவு, கல்வி செலவுகளை துனியா விஜய் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர். தனக்கு விவாகரத்து வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு துனியா விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றும், எனது புதிய வாழ்க்கை பயணம் இனி தொடங்குவதாகவும் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/karnataka-high-court-orders-divorce-for-actor-duniya-vijay-and-his-wife-nagarathna



