சென்னை, 10 நாட்களில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரூ.44 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’. கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி2’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷாலுடன் மீண்டும் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம், காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளது. ரசிகர்களின் வரவேற்பால் திரைகள் அதிகரிப்பு கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’, முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நேர்மறையான விமர்சனங்களும், குடும்ப ரசிகர்களின் ஆதரவும் கிடைத்துள்ளதால், இரண்டாவது வாரத்திலும் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, படத்தின் திரையிடல் 700-க்கும் மேற்பட்ட திரைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.44 கோடி வசூல். புதிய சாதனை இந்நிலையில், 10 நாட்களில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரூ.44 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vishnu-vishals-gatta-kusthi-2-film-collects-rs-44-crores-in-10-days




