லத்தூர் மராட்டியத்தில் தோஷம் கழிக்கிறேன் என கூறி பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பிணியானார். மராட்டியத்தின் லத்தூர் மாவட்டத்தில் தாக்ரே சவுக் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்வர் மஹராஜ். இவர் 17 வயது சிறுமியிடம், உனக்கு ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது. அதனை சில சடங்குகள் நடத்தி தீர்க்கிறேன் என கூறியுள்ளார். அதனை சிறுமியும் நம்பி உள்ளார். கர்ப்பிணியான சிறுமி இதன்பின்னர் தோஷம் கழிப்பதற்கான விசயங்களை செய்கிறேன் என கூறி சிறுமியின் வீட்டில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பிணியானார். இதனை யாரிடமும் கூறக்கூடாது என்றும் அப்படி கூறினால், தோஷம் திரும்பி வந்து விடும் என்று கூறி சிறுமியை மிரட்டியிருக்கிறார். இதனால், சிறுமி யாரிடமும் இதுபற்றி கூறவில்லை. கடந்த ஜூனில் இந்த விசயம் நடந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இந்த விசயம் வீட்டுக்கு தெரிந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டம், போக்சோ மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மாநில சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. இந்த வழக்கு பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என விவேகானந்த சவுக் காவல் நிலைய அதிகாரி கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/maharashtra-girl-impregnated-after-sexual-assault-by-man-claiming-to-perform-a-ritual-to-remove-a-curse




