கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், வாளையார் பகுதிகள் வழியாக இயக்கப்படும் ரயில்கள், மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஏ, பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 'ஏ' ரயில் பாதை 2.9 கி.மீ. தூரமும், 'பி' ரயில் பாதை 4.15 கி.மீ தூரமும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன. இதேபோல கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதி வழியாக செல்கின்றன. இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வந்தன. இதனை தடுப்பதற்காக கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏ.ஐ செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்டறிந்து எச்சரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2023ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதன்படி 12 டவர்கள் அமைக்கப்பட்டு, 24 ஏ.ஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 7.05 கி.மீ. தூரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏ.ஐ கண்காணிப்பு யானைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வரும் போது, கட்டுப்பாட்டு அறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கும், வனத்துறையினருக்கும், லோகோ பைலேட்டிற்கும் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் லோகோ பைலேட் ரயிலின் வேகத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ரயில் தண்டவாள பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வனப்பணியாளர்கள், காட்டு யானைகள் தென்பட்டால் விரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுக்கரை ரயில் பாதையில் எந்த ஒரு காட்டு யானை உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதேபோல இதுவரை சுமார் 25 ஆயிரம் முறை வனவிலங்குகள் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளன. குறிப்பாக 7,592 முறை காட்டு யானைகளும், 214 முறை சிறுத்தைகளும், 669 முறை காட்டு மாடுகளும், 21,612 முறை மான்களும் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளன. இந்த நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்திய பிரதேசம், மேகாலயா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ரயில் விபத்தில் வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க திட்டமிட்டுள்ளன. ஏ.ஐ கண்காணிப்பு இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “ரயில் மோதி காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க இந்த ஏ.ஐ. தொழில்நுட்ப திட்டம் நாட்டின் முன்னோடியாக விளங்கி வருகிறது. இதனை செயல்படுத்த மத்திய பிரதேசம், மேகாலயா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கோவை வனத்துறையை அணுகியுள்ளன. அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்” என்றனர். கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/ai-technology-to-prevent-elephant-deaths-caused-by-train-collisions-in-coimbatore




