சென்னை ஆவின் பால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் கடந்த ஒரு மாதமாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடைகளுக்கு ஆவின் பால் விநியோகம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் முன்பு ஒரு கடைக்கு 32 பெட்டிகள் ஆவின் பால் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 20 பெட்டிகள் வழங்கப்படுகிறது எனவும் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பச்சை நிற பால் காலை நேரத்திலேயே பல கடைகளில் ஆவின் பால் கிடைப்பதில்லை எனவும் அண்மைக் காலமாக ஆவின் பாலின் தரம் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இரண்டு மாதமாக பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் ஆவின் பாலை நம்பியிருக்கும் குடும்பங்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தேநீர்க் கடை உரிமையாளர்கள் தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மக்கள் கோரிக்கை தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால், விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக ஆவின் பால் கொள்முதல் குறைந்து தட்டுப்பாட்டு ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் கொள்முதல் விலையை அதிகரித்து, ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-shortage-continues-in-chennai-people-face-hardship




