Articolo completo
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெள்ளிமாடுகுந்நு பகுதியில் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் இந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த சிறுவர்களுக்கு இம்மாதம் தொடக்கத்தில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. அப்போது அங்கு தங்கியிருந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னை சீர்திருத்தப்பள்ளி காப்பாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளான். சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளர் பி.அயூப், தன்னை அந்தக் காப்பகத்திலேயே வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுவன் தெரிவித்தான். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் தெரிவித்தான். இதையடுத்து அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக் காப்பாளராக இருந்த செலவூர் பகுதியைச் சேர்ந்த பி.அயூப் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் சேவாயூர் போலீஸார் ஜூன் 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். கைதுசெய்யப்பட்ட அயூப் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்தவுடன் காப்பாளர் பி.அயூப் தலைமறைவானார். அவரைக் கைது செய்வதற்காக போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். போலீஸ் விசாரணை தீவிரமடைந்ததை அடுத்து, தப்பிக்க வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட பி.அயூப், இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றம் அவரைக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. சிறுவனுக்கு பாலியல் கொடுமை பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனைத் தவிர, அந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தங்கியிருக்கும் மற்ற சிறுவர்களிடமும் அயூப் இது போன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் சேவாயூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலேயே சிறுவனுக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




