புதுடெல்லி 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் தொடர்ச்சியாக, அத்தியாவசிய பரிவர்த்தனைகளை முடிக்க வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வாரத்துக்கு 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்தம் தொடர்ச்சியாக, வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வங்கி பரிவர்த்தனை இதனால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் இயங்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதேபோன்று, வேலை நிறுத்தத்துக்கு முன்பு அத்தியாவசிய வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளுமாறு வங்கிகளும் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளன. மேலும் பண தேவைகளுக்கு தங்கள் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங், யு.பி.ஐ. உள்ளிட்டவற்றை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்பட பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை உஷார்படுத்தி குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/3-day-continuous-strike-banks-urgent-advisory-to-customers




