ஊட்டி, மரபணு நோயால் உயிருக்கு போராடும் ஆறு மாத குழந்தைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி பெற்றோர், குழந்தையுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். குழந்தை ஊட்டி அருகே ஆறு குச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகன் - பிரேமலதா தம்பதியின் 6 மாத குழந்தை லக்ஸ்வின், மரபணு குறைபாட்டால் முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, குழந்தை மூன்று மாதங்களாக உயிருக்கு போராடி வரும் நிலையில், அந்த நோயை குணப்படுத்த உடனடியாக, 16 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டில் இருந்து வரவழைக்கும் ஊசி மருந்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனு கூலி வேலை செய்யும் தங்களால் இத்தொகையை செலுத்த முடியாத நிலையில், தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரி பெற்றோர், குழந்தையுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வருவதாகவும், சிகிச்சைக்கான மருத்துவச்சான்றுகளை அரசிடம் அளித்துள்ளதாகவும் தந்தை முருகன் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-petition-government-for-help-for-six-month-old-infant-battling-a-genetic-disease



