திண்டுக்கல் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை இந்நகரின் முக்கியமான வரலாற்றுச் சிறப்புகளில் ஒன்றாகும். மலை திண்டு போன்ற வடிவத்தில் காட்சியளிப்பதால் இப்பகுதிக்கு திண்டுக்கல் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. புராண காலத்தில் இந்த மலை பத்மகிரி, திண்டீச்சுரம், நெல்லிவனம் உள்ளிட்ட பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 1200 அடி நீளமும், 900 அடி உயரமும் கொண்டதாக இந்த மலைக்கோட்டை விளங்குகிறது. கி.பி.1553-ம் ஆண்டு விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர், திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் இருந்த ஆலயத்தைப் புதுப்பித்ததாக வரலாறு கூறுகிறது. பின்னர் கி.பி.1605-ம் ஆண்டு மதுரையை ஆட்சி செய்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் மலையில் கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் மலை மீது உள்ள அபிராமி அம்மனை பக்தர்கள் எளிதாக தரிசிக்க 600 படிகள் செதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மலைக்குச் சென்று அம்மனை வழிபடுவதற்கு வசதி ஏற்பட்டது. மலைக்கோட்டையின் தென்கிழக்குப் பகுதியில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில், ராணுவ வீரர்கள் தங்குவதற்கான பாசறைகள் மற்றும் அக்கால பீரங்கி அமைப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், மலையின் கீழே கோட்டைக் குளமும், வடக்கே அய்யன் குளமும், தெற்கே அகத்தியர் தெப்பமும் அமைந்துள்ளன. மலைக்கோட்டையைச் சுற்றியிருந்த அகழியின் அடையாளங்களாக இப்பகுதியில் காணப்படும் சில அமைப்புகள் கருதப்படுகின்றன. 1788 முதல் 1790 வரையிலான காலகட்டத்தில் திப்பு சுல்தான் இந்த மலைக்கோட்டையைத் தளமாகக் கொண்டு ஆட்சி நடத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மலைக்கோட்டையின் கீழே உள்ள கோட்டைக் குளத்தின் கிழக்குப் பகுதியில் கவாத்து மைதானம் எனப்படும் பேரேடு மைதானம் இருந்ததாக கூறப்படுகிறது. திப்பு சுல்தான் காலத்தில் அங்கு பணியாற்றிய ராணுவத்தினர் ஒரு சிறிய பீடத்தை அமைத்து, பின்னர் அம்மன் மூலஸ்தான விக்ரகத்தையும் நிறுவியதாக வரலாறு கூறுகிறது. ராணுவத்தினரின் காவல் தெய்வமாக விளங்கிய அந்த அம்மன் சன்னதி காலப்போக்கில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவிலாக வளர்ந்ததாக கூறப்படுகிறது. இன்று திண்டுக்கல்லின் முக்கிய ஆன்மிக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களில் ஒன்றாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. அடிக்கடி நகம் கடிப்பவரா? நகச்சுற்று தொற்று ஏற்படலாம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/history-of-dindigul-kottai-mariamman-temple




