கோவை, கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைதான திருப்பூர் போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாணவிக்கு உதவி திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(வயது 32). போலீஸ்காரரான இவர் கோவை போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர் பொள்ளாச்சி சென்றார். அங்கிருந்து தனியார் பஸ் மூலம் கோவை திரும்பினார். அப்போது கிணத்துக்கடவில் இருந்து 19 வயதான கல்லூரி மாணவி அந்த பஸ்சில் ஏறினார். படிக்கட்டில் நின்றிருந்த அந்த மாணவிக்கு பஸ்சில் ஏற சீருடையில் இருந்த போலீஸ்காரரான மணிவேந்தன் உதவி செய்தார். பாலியல் தொல்லை பின்னர் அந்த மாணவியின் அருகே நின்றிருந்த மணிவேந்தன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் மணிவேந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது. அதிகாரிகள் விசாரணை இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கையை கமிஷனருக்கு சமர்ப்பித்தனர். இதையடுத்து அவர், போலீஸ்காரர் மணிவேந்தனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-college-student-arrested-tiruppur-policeman-suspended




