நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. கோத்தகிரி பாண்டியன் பூங்கா, தாந்தநாடு, மிளிதேன் போன்ற கிராம பகுதிகளில் உள்ள பேரிக்காய் தோட்டங்களில் தற்போது சீசன் காரணமாக காய்கள் காய்த்து குலுங்குகின்றன. இந்த பேரிக்காய்களை உண்பதற்காக கரடிகள் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் கோத்தகிரி பாண்டியன் பூங்காவில் இருந்து தாந்தநாடு செல்லும் சாலையில் ஊடு பயிராக பேரிக்காய் பயிரிடப்பட்டுள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்த கரடி, ஒன்று அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். சற்று நேரம் அந்த பகுதியிலேயே கரடி உலா வந்தது. பின்னர் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மறைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiri-bear-enters-residential-area-residents-alarmed




