ஒட்டாவா, டிரம்ப் மிரட்டல் அமெரிக்காவில் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல், கனடாவுடன் கடுமையான வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகப் போர்கள் வெடித்துள்ளன. இதன் உச் சகட்டமாக, "உலகிலேயே மிக மோசமான நாடு கனடா, அவர்கள் இத்தனை காலம் அமெரிக்காவை ஏமாற்றிவிட்டார்கள்" என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். மேலும், வரும் ஜனவரி மாதம் முதல் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் கார்கள் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் மீது புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, கனடா தற்போது ஐரோப்பாவை நோக்கித் திரும்பியுள்ளது. உறுப்பினராக இணையப் போவதில்லை கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் "துணை உறுப்பினர்” ஆகப் போவதாக செய்திகள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, “நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை. ஆனால், இரு தரப்புக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத ஒரு பிரத்தியேக உத்திசார் கூட்டணியை உருவாக்கப் பேச்சுவார்த்தைகளை தொடங்க உள்ளோம். நமது நாடுகள் ஒரே மாதிரியான கொள்கைகளையும், ஒன்றுக் கொன்று உதவக்கூடிய பலங்களையும் கொண்டுள்ளன” என்று தெளிவுபடுத்தினார். இந்த கூட்டணியை இறுதி செய்யப் பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். விசா இல்லாத வேலை அங்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த புதிய கூட்டணி மூலம் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் முக்கியத் தாதுக்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் சேவைகளும் தொழிலாளர்களும் எவ்வித தடையுமின்றி எல்லைகளை கடந்து செல்ல வழிவகை செய்யப்படும். மேலும், கடலுக்கு அடியில் கேபிள்கள் பதிப்பது, பிரமாண்ட தரவு மையங்களை கூட்டுறவோடு அமைப்பது மற்றும் கனடா குடிமக்கள் விசாயின்றி ஐரோப்பாவில் வாழவும் வேலை செய்யவும் இந்த பேச்சுவார்த்தையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனி னும், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இந்த ஒப்பந்தத்துக்கு உள்ளூர் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/canada-strengthens-ties-with-the-european-union




