விண்ட்ஹோக், தென் ஆப்பிரிக்காவின் இளம் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரேவிஸ், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஜேபி டுமினியுடன் இணைந்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். 35 போட்டிகளில் 71 சிக்ஸர்கள் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்தப் போட்டியில் டெவால்ட் பிரேவிஸ் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் அவரது சிக்ஸர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஜேபி டுமினியுடன் இணைந்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். பிரேவிஸ் இதுவரை 35 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 71 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதேபோல், ஜேபி டுமினி 81 டி20 சர்வதேச போட்டிகளில் 71 சிக்ஸர்கள் அடித்துள்ளார். டாப்-3 வீரர்கள் யார்? டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் 139 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், குவிண்டன் டி காக் 133 சிக்ஸர்களுடன் 2-வது இடத்திலும், எய்டன் மார்க்ரம் 83 சிக்ஸர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. பின்னர் 206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/dewald-brevis-ties-with-jp-duminy-becomes-4th-highest-six-hitter-for-sa-in-t20is




