சென்னை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் இணைந்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியாக இந்தத் தேர்தல் களத் தில் பணியாற்றுகின்றன. இந்தக் கூட்டணியின் நோக்கம் வெறும் ஒரு தேர்தல் வெற் றியோடு முடிந்துவிடக் கூடாது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று அந்த நம்பிக் கையை ஆட்சியின் செயல்பாடுகளாக மாற்ற வேண்டும். அந்தப் பயணம் தொடர்ந்து வெற்றிப் பயணமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான் நாம் அனைவரும் களத்தில் நிற்கிறோம். எனவே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு விசில் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெறச்செய்யுங்கள். இந்த 2 தொகுதிகளிலும் நீங்கள் வழங்கும் தீர்ப்பு தமிழகத்தின் அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ensure-tvks-victory-in-the-by-election-kader-mohideens-appeal




