ஈரான் போர் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதில் இந்தியா விதிவிலக்கல்ல. கச்சா எண்ணெய் நெருக்கடி சூழலைச் சமாளிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்தது. அதில் ஒன்றுதான் பெட்ரோலில் 20 சதவிகித எத்தனாலைக் கலப்பது ஆகும். பெட்ரோலில் எத்தனால் கலக்கும்போது, வாகனத்தின் செயல்திறன் குறைகிறது என்கிற எதிர்ப்பு குரல் நாடு முழுவதும் எழுந்தது. தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்தான கேள்வி போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் எழுப்பப்பட்டது. நிதின் கட்கரி இதற்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் எழுத்துப்பூர்வப் பதில். ''இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் E20 எரிபொருளின் தாக்கங்களை மதிப்பிடுவதற்கான ஆய்வு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), இந்திய பெட்ரோலிய நிறுவனம் (IIP), இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மற்றும் இந்திய ஆட்டோமோட்டீவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டது. வாகனங்களின் புகை உமிழ்வு அதற்கான உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டே உள்ளது. E20 எத்தனால் பெட்ரோல்: வண்டிகளையே காலி பண்ணுதா? - உரிமையாளர்கள் புலம்பல், அரசு சொல்வது என்ன? 2016-ம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில்தான். இந்த ஆய்வுகளின்படி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எஞ்சின்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது தெரியவந்துள்ளது. பழமையான வாகனங்கள் கூட E20 எரிபொருளில் இயங்கும்போது, அவற்றின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளையோ அல்லது வழக்கத்திற்கு மாறான தேய்மானங்களையோ காட்டவில்லை என்பதை இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஏப்ரல் 1, 2005 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு 2016-க்கு முன் தயாரிக்கப்பட்ட BS-III வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மட்டும், சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கட்களை (gaskets) மாற்ற வேண்டியிருக்கலாம். இதை வாகனத்தின் வழக்கமான சர்வீஸின் போதே எளிதாகச் சரிசெய்துவிட முடியும். பெட்ரோல் பயன்பாட்டின் அளவுக்கூட. E20 எரிபொருள் பயன்பாட்டினால் வாகனத்தின் மைலேஜ் குறையுமோ என்ற கவலை குறித்து விளக்கமளித்துள்ள வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாகன/எஞ்சின் பரிசோதனை முகமைகள், மைலேஜ் என்பது வெறும் எரிபொருள் வகையை மட்டும் சார்ந்ததல்ல, மாறாகப் பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளன. வாகனம் ஓட்டும் பழக்கம், ஆயில் மாற்றம் மற்றும் ஏர் ஃபில்டர் தூய்மை போன்ற பராமரிப்பு முறைகள், டயர் காற்று அழுத்தம் மற்றும் அலைன்மென்ட், ஏன் ஏசி பயன்பாட்டின் அளவு ஆகியவை இதில் அடங்கும்'' E20: `நீங்களோ நானோ, காரின் மைலேஜை சரியாக கணக்கிட முடியாது!' - அமைச்சர் நிதின் கட்கரி புது விளக்கம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/automobile/e20-fuel-does-not-affect-vehicle-performance-govt-tells-parliament




