பெங்களூரு, கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரம் குறித்து மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; இன்னும் உறுதியாகவில்லை ”நானும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் அவரவர் மாநில மக்களின் நலன்களின் அக்கறையாக உள்ளோம். நாங்கள் இருவரும் இரு மாநில நிலவரம் குறித்து தொலைபேசியில் பரஸ்பரம் பேசிக்கொண்டோம். அவர் 3-ந்தேதி கர்நாடகா வருவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசியல் சூழல் காரணமாக அவரது வருகை இன்னும் உறுதியாகவில்லை. கர்நாடகா வர வேண்டாம். கர்நாடகத்தில் தற்போதைய சூழல் சரியில்லை. பதற்றமான சூழலில் முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கோரிக்கை வைக்கிறேன். தமிழக முதல்-அமைச்சர் வரும்போது கர்நாடகாவில் போராட்டம் நடந்தால் சரியாக இருக்காது. எங்கள் மாநிலத்திற்கு விருந்தினராக வருவோருக்கு எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. சிறிது காலம் காத்திருக்கலாம். அதன் பின்னர் இருவரும் நேரில் சந்தித்து பேசலாம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/chief-minister-vijays-visit-to-karnataka-is-not-yet-confirmed-dk-shivakumar




