கொழும்பு, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி கடந்த 15ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. கடைசி டெஸ்ட் இந்நிலையில் இந்தியா, இலங்கை இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டாஸ் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கி விளையாட உள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், தொடரை சமன்செய்ய இலங்கையும் போராடும் என்பதால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் கருதுகின்றனர். இரு அணி வீரர்கள் விவரம் இந்தியா: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், ஜடேஜா, துருவ் ஜோரேல், சரன்ஷ், மனவ் சுதர், சிராஜ், பிரசித் கிருஷ்ணா இலங்கை: லஹிரு உதரா, கமில் மிஷாரா, பசிந்து சூர்யபந்திரா, கமிண்டு மிண்டிஸ், தனஞ்ஜெய டி சில்வா (கேப்டன்), சோனல் தனுஷா, நிரோஷன் டிக்வாலா, கேஷர நுவந்தா, பிரபத் ஜெயசூர்யா, லஹிரு குமரா, அஷிதா பெர்னாண்டோ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/last-test-against-sri-lanka-india-choose-to-bat




