புதுடெல்லி, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி. சிந்த ஜப்பான் ஓபன் சூப்பர் 750 தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், வரலாற்று வெற்றிக்கு விராட் கோலியைத் தொடர்புகொண்டு ஆலோசனைக் கேட்டதும் காரணம் என பிவி சிந்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியாதாவது, என் விளையாட்டு வாழ்க்கையின் மிகவும் கடினமான கட்டத்தில் அவரைத் தொடர்புகொண்டேன். தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. எதிர்பார்த்த முடிவுகளும் கிடைக்கவில்லை. என்னுடைய நிலையை உண்மையாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் எனக்கு தேவைப்பட்டார். நான் செய்திக்கு அனுப்பிய சில நிமிடங்களிலேயே அவர் பதிலளித்தார். அதற்கடுத்த நாளே நாங்கள் நேரில் சந்தித்தோம். நாங்கள் என்ன பேசிக்கொண்டோம் என்பது எங்களுக்குள் மட்டுமே இருக்கும். ஆனால் எனக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் எனக்காக இருந்ததற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். அவர் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஆழமாகப் பதிந்துவிட்டது. சில உரையாடல்கள் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். அது அப்படிப்பட்ட ஒரு உரையாடலாக இருந்தது.என தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/conversation-with-virat-kohli-the-subsequent-change-pv-sindhu-moved




