தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அமைதி ஒப்பந்தம் அதேவேளை, பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளின் முயற்சியால் அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து ஹர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பயணம் செய்ய அனுமதிப்பதாக ஈரான் அறிவித்தது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்க் கட்டணம் விதிக்கப்படும் என்று ஈரான் அறிவித்தது. மேலும், தங்கள் அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அந்த வகையில் கடந்த மாதத்தில் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதல் இதனிடையே, ஓமன் வளைகுடா பகுதியில் ஹர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஹர்முஸ் ஜலசந்தியில் ஓமனின் லிமாஹ் பகுதியில் அருகே சென்றுகொண்டிருந்த கத்தார், சவுதி அரேபியா நாடுகளுக்கு சொந்தமான சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா தாக்குதல் சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி எனக்கூறி ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு, ஆயுத கிடங்குகள் உள்பட 80 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத், பஹ்ரைன் மீது தாக்குதல் - காரணம் என்ன? இந்நிலையில், குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி எனக்கூறி குவைத், பஹ்ரைன் மீது தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. பஹ்ரைனின் ஷேக் ஐசா விமானப்படைதளம், குவைத்தின் விமான நிலையம் உள்பட இரு நாடுகளின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/iran-attacks-bahrain-kuwait-what-is-the-reason




