சென்னை, மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகவும், செம்மண் குன்றுகள் நிறைந்த புவியியல் முக்கியத்துவம் மிக்க பகுதியாகவும் இருப்பவை குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் தேரிக்காடுகள். இத்தகைய தேரிக்காடுகளை வனவிலங்கு சரணாலயமாகவும், சூழலியல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அதே நிலப்பரப்பில் தாதுமணல் மற்றும் அரிய மண் தனிமங்களை எடுப்பதற்கான கொடிய திட்டங்களையும் தவெக அரசின் கனிமவளத்துறை முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் அரிய வகை நிலப்பரப்பாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான சூழலியல் பகுதிகளாகவும் விளங்கும் இந்தத் தேரிக்காடுகளை அழிக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-government-must-immediately-abandon-the-plan-to-destroy-the-theri-forests-kanimozhi-mp



