திருப்பூர் மாவட்டம் சின்னக்கரை சோதனைச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்திச் செல்வதாக பல்லடம் காவல்நிலைய ஆய்வாளருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் குழுவாகச் சென்ற காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். வடமாநில இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஒடிசாவிலிருந்து ரயிலில் ஏ.சி கம்பார்ட்மென்ட் மூலம் கஞ்சா பார்சல்கள் வந்துக் கொண்டிருப்பதாக உண்மையைக் கூறியுள்ளனர். கைதானவர்கள் திருப்பூர் ரயில் நிலையம் சென்ற காவல்துறையினர், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏ.சி பெட்டியில் 30 கிலோ கஞ்சா பார்சல்கள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக ஒடிசாவைச் சேர்ந்த மிர்துன்ஜெயா ரானா (26), நிரோட் பாக் (24), பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் (28),சூர்யகாந்த் தாஸ் (25) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் கடத்திவரப்பட்ட 36 கிலோ கஞ்சா - ஒடிசாவைச் சேர்ந்த பெண் உட்பட 5 பேர் கைது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/odisha-to-tiruppur-30-kg-of-ganja-transported-in-ac-coach-arrest-of-four-with-gun




