சென்னை, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று நேரில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவரை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தையே வழிநடத்துவது வரை, சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. தமிழகத்தின் மாண்புமிகு முதல்-அமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது ஒரு பெருமைக்குரிய தருணம். 'ரசிகன் எக்ஸ்பிரஸ்' முதல் 'விஜய் அவார்ட்ஸ்' மேடை வரை, 'GOAT' திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல், இப்போது உங்களுடன் இந்தத் தருணம் வரை; இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். அந்த சகோதரத்துவமும், அந்த பிணைப்பும், எப்போதும் தொடர்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/actor-sivakarthikeyan-meets-chief-minister-vijay




