புதுடெல்லி, தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை அனைத்து கட்சி கூட்டம் ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் கூட்டப்படவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு தமிழகத்தில் தி.மு.க கூட்டணயில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் தி.மு.க எம்.பி.களின் இருக்கைகளை மாற்றி தர வேண்டும் என்று தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுக்கு கடிதம் கொடுத்திருந்தார். இதனை ஏற்று தற்போது மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி.களின் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. திமுக இருக்கைகள் மாற்றம் மாநிலங்களவையைத் தொடர்ந்து, மக்களவையிலும் திமுக எம்பிக்களுக்கான இருக்கைகளை மாற்றி அமைப்பதற்கான இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அங்கேயும் இருக்கைகள் மாற்றப்படும் என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற அவையின் விதிகள் மற்றும் திமுகவின் தற்போதைய பலத்தின் அடிப்படையில் இந்த இருக்கை மாற்றி அமைக்கும் அதிரடி நடவடிக்கை தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/dmk-seats-in-parliament-changed




