சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- 2 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் " சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி" பாரம்பரிய அரிசி வகைகள் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 2 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வரும் 15.07.2026 முதல் 16.07.2026 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சிறுதானிய பொருட்களின் இரத்தசாலி அரிசி மாவு லட்டு, திணை நாட்டு சர்க்கரை பூந்தி லட்டு கருப்பு கவுனி அல்வா, கேழ்வரகு மைசூர் பாக், பூங்கார் அரிசி முறுக்கு, திணை ஓமப்பொடி, குதிரைவாலி சீவல், வரகு மிச்சர், சோளம் காராசேவ், சாமை பட்டர், முறுக்கு,வரகு காராபூந்தி, கம்பு முறுக்கு வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்காண விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும். விண்ணப்பிக்கலாம் இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, கைபேசி எண்கள். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032. கைபேசி எண்கள்: 8668102600/7806918309 முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/how-to-make-value-added-food-products-from-traditional-rice-2-days-training-in-chennai




