சென்னை, ஆளுங்கட்சியினருக்கே பாதுகாப்பில்லாத அவல ஆட்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- சட்டம் ஒழுங்கு நேற்றிரவு சென்னை அடையாறு அருகே, தவெக நிர்வாகியான கண்ணன் என்பவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காணொளி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரின் பொதுவெளியிலேயே இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது என்றால், தமிழகத்தின் மற்ற உள் கிராமங்களில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படி இருக்கும் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் முழுதாக முடிந்த பிறகும் கூட, மக்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், சட்டம் ஒழுங்கில் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தாமல், திங்கள் முதல் வெள்ளி வரை 9 முதல் மாலை 5 மணி என்ற கோட்பாட்டின் கீழ் மட்டுமே வேலை பார்த்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய். 200- க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் அதனால் தான் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 200- க்கும் அதிகமான பாலியல் குற்றங்களும், கிட்டதட்ட 200 கொலை குற்றங்களும், ஆயிரக்கணக்கான போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. ரீல்ஸ்களை எடுப்பதில் காட்டும் ஆர்வம் எனவே, சினிமாவை போல, சட்டமன்றத்தில் வசனம் பேசி கொண்டிருக்கும் ஜோசப் விஜய், தான் தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்பதை முதலில் உணர வேண்டும். கையை அசைப்பது போலவும், பாட்டிக்கு கண்ணாடி கொடுப்பது போலவும் ரீல்ஸ்களை எடுப்பதில் காட்டும் ஆர்வத்தையும் கவனத்தையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதும் கொஞ்சம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ruling-party-members-not-safe-under-misrule-says-nainar-nagendran




