ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில், 21 வயதான பாயல் தேவி என்ற இளம்பெண் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற மகள் பாயல் நேற்று உள்ளூரில் நடந்த திருவிழாவிற்கு சென்றிருந்தார். திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவரை சந்திக்க போவதாகவும் போனில் கூறினார். ஆனால், அங்கு டாக்டர் இல்லாததால் அவர் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, கிராமத்தை சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் அவர் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென பாலத்தின் விளிம்பிற்கு ஓடிய பாயல், ஆற்றில் குதிக்க முயன்றார். பதறிப்போன உறவினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுக்க எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை. கடைசி நிமிடம் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் அவர் சிரித்தபடியும், கையசைத்தபடியும் இருப்பது போல தோன்றினாலும், அதன் பின்னணியில் ஒரு தீராத சோகம் ஒளிந்துள்ளது. அவர் குதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது தந்தை போனில் அவரிடம் பேச முயன்றுள்ளார். அப்போது அவரிடம் பேசிய பாயல், "பை பை அப்பா" என்று கூறிவிட்டு ஆற்றில் குதித்துள்ளார். தேடும் பணி வெளியில் சிரித்த முகத்துடன் காணப்படும் நபர்கள் கூட, தங்களுக்குள் கடுமையான மன போராட்டங்களை எதிர்கொண்டிருக்கலாம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. தற்போது மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாயல் தேவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/smiling-tata-flying-kiss-young-woman-jumps-into-river



