தூத்துக்குடி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாள்வதில் 74.5 சதவீதம் வளர்ச்சியடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களைக் கையாள்வதில் தொடர்ந்து கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்து, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சரக்குப் போக்குவரத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்து வருகிறது. 74.5 சதவீதம் வளர்ச்சி நடப்பு 2026-27-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2,188 காற்றாலை இறகுகளைக் கையாண்டுள்ளது. 2025-26-ம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 1,254 காற்றாலை இறகுகள் மட்டுமே கையாளப்பட்டிருந்த நிலையில், இது 74.5 சதவீதம் வளர்ச்சியாகும். மேலும் இந்த காலக்கட்டத்தில் துறைமுகத்திற்கு வந்த காற்றாலை இறகு கப்பல்களின் எண்ணிக்கை 39-ல் இருந்து 52 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நிதியாண்டுகளில் வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகுகள் கையாள்வதில் அடைந்துள்ள வளர்ச்சி: 2023-24-ம் நிதியாண்டு: 2,030 இறகுகள் 2024-25-ம் நிதியாண்டு: 2,635 இறகுகள் 2025-26-ம் நிதியாண்டு: 4,922 இறகுகள் (முந்தைய ஆண்டை விட 86.8 சதவீதம் வளர்ச்சி). திறந்தவெளி சேமிப்பு இடங்கள் பெரிய அளவிலான காற்றாலை உதிரிபாகங்களைச் சேமித்து வைக்கவும் கையாளவும் துறைமுகத்தில் பிரத்யேக உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலும், சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 1 லட்சத்து 44 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலும் திறந்தவெளி சேமிப்பு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய காற்றாலை இறகுகளை கையாளும் திறன் துறைமுகத்தின் 5, 6 மற்றும் 7-வது சரக்கு தளங்களில் சுமார் 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான தள அமைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. 90.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய காற்றாலை இறகுகளையும் கையாளும் திறனைத் துறைமுகம் நிரூபித்துள்ளது. தூய்மையான எரிசக்தி இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் கூறுகையில், "தூய்மையான எரிசக்தியை நோக்கிய மாற்றம், இந்திய துறைமுகங்களுக்கு புதிய சரக்கு போக்குவரத்துத் தேவைகளை உருவாக்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை வ.உ.சி. துறைமுகம் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிச் சாலைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலின் வழிகாட்டுதலிலும், இந்தியாவின் 'பஞ்சாமிர்த' உறுதிப்பாடுகள் மற்றும் தூய்மை எரிசக்தி இலக்குகளுக்கு ஏற்ப இச்சேவைகள் திறம்பட முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/745-percent-growth-in-handling-of-wind-turbine-blades-thoothukudi-voc-port-records-record




