பிரிட்டன், சூடான டீயை ரசித்து குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் வாய்ப்பு பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சுமார் 10 லட்சம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், அதிக சூட்டில் டீ குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். மிதமான சூட்டில் டீ அல்லது காபி குடிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, அதிக சூட்டில் டீ குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மிதமான சூட்டில் குடிப்பதே சிறந்தது டீ அல்லது காபி குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அவற்றை அதிக அளவு சூட்டில் குடிப்பதே நோய் பாதிப்பிற்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக சூட்டில் உள்ள பானங்களை தொடர்ந்து பருகும்போது, வாயில் இருந்து வயிற்றுக்குச் செல்லும் உணவுக்குழாயின் உள்பகுதி செல்கள் மீண்டும் மீண்டும் சூட்டால் பாதிக்கப்படலாம். இதனால் உணவுக்குழாயில் காயம் மற்றும் அலர்ஜி ஏற்படுகிறது. எனவே, டீ அல்லது காபியை கொதிக்கும் நிலையில் குடிப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் ஆறவைத்து மிதமான சூட்டில் குடிப்பது நல்லது என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/shocking-information-do-you-enjoy-drinking-hot-tea-the-risk-of-cancer-increases-by-3-times




