சென்னை, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 52 பெரிய கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கோவில் களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில்களில் செல்போனுக்கு தடை தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள். ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் இன்று (செப்டம்பர்-1) முதல் 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாக்க கோவில்களில் கட்டணத்துடன் பாதுகாக்கும் பெட்டக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்த்தசாரதி- வடபழனி சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி கள் கூறியதாவது:- பாதுகாப்பு பெட்டகம் தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் நாளை (இன்று) முதல் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட 52 கோவில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில்களில் 20 ஆயிரம் செல்போன்கள் வைக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா காலங்களிலும், முக்கிய நாட்களிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்போன்களை வைக்க இடமில்லாமல் தவிக்க நேரிடும். இதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அதிகாரிகள் மீது நடவடிக்கை இதனைத் தவிர்க்க வீடுகள் மற்றும் வெளியூர் பக்தர்கள் விடு திகள் அல்லது கார்களில் வைத்துவிட்டு வருவது நல்லது. கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-comes-into-effect-today



