செயின்ட் கிட்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் செயின்ட் லூசியாவை வீழ்த்தி பார்படோஸ் அபார வெற்றி பெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன செயின்ட் லூசியா கிங்ஸ் - பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பார்படோஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கமில் பூரன் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய பார்படோஸ் வீரர் முஜிபுர் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் வெற்றி இதனை தொடர்ந்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படோஸ் 17.5 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் செயின்ட் லூசியா கிங்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய பார்படோஸ் வீரர் குவிண்டன் டிகாக் அதிகபட்சமாக 47 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-barbados-stun-saint-lucia




