வாஷிங்டன், பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி மரணமடைந்தார். பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சடர்லி (வயது 40). இவர் உலக அளவில் புகழ்பெற்ற டபிள்யூ டபிள்யூ இ மல்யுத்தத்தில் பங்கேற்றுள்ளார். இவரை பெக் (pac) என்று மல்யுதத்தில் பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழக்கம். பெஞ்சமின் மரணம் இந்நிலையில், மல்யுத்த வீரர் பெஞ்சமின் என்கிற பெக் நேற்று திடீரென உயிரிழந்தார். அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பங்கேற்ற பெஞ்சமின் அந்த போட்டிக்குப்பின் சில மணிநேரங்களில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, பெஞ்சமின் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/wrestling-star-benjamin-pac-dies-shocks-fans




