கோவை, கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழக சட்டசபை சினிமாவில் வருவது போல் நடைபெறுகிறது. நேரலையாக பேரவை நடவடிக்கைகள் ஒளிப்பரப்பினால்தான் மக்களுக்கு என்ன நடக்கிறது என தெரியும். பேரவையை 24 மணி நேரம் கூட சபாநாயகர் நடத்துவார். பெரும்பாலான அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது இல்லை. தவெக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. அரசிடம் நிதி இல்லாத நிலையில் அதிக அறிவிப்புகள் ஏன்? இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது. அப்படியே நீடித்தாலும் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். கடனை அதிகம் வாங்கும் தவெக அரசு வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல் என்கிறார்கள். அது அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/ministers-do-not-answer-departmental-questions-edappadi-palaniswami-alleges




