தொண்டி, தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் விறுவிறுப்பான பாய்மர படகு போட்டி நடைபெற்றது. பாய்மர படகு போட்டி திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தில் பட பத்திரகாளி, முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடந்து வரும் முளைப்பாரி திருவிழாவையொட்டி பாய்மர படகு போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் தொண்டி. புதுக்குடி, நம் புதாளை, தேவிபட்டினம், கிருஷ்ணாஜிபட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 26 பாய்மர படகுகள் கலந்து கொண்டன. பரிசு ஆறு கடல் மைல் தூரம் சென்று வந்த படகு பந்தயத்தில் ஒரு படகுக்கு 7 பேர் வீதம் 182 போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டியில் பாய்மரப்படகுகள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு முந்திச் சென்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக போட்டிக்கு கிராமத்தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். தொண்டி கடற்கரை போலீசார், தொண்டிபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/sailing-boats-racing-in-the-sea-a-thrilling-competition-near-thondi




