டெல் அவிவ் இந்திய விமானி மச்சாருக்கு இஸ்ரேல் ஜனாதிபதி நன்றி தெரிவித்து கொண்டார். துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி எப்.இசட்.1073 என்ற எண் கொண்ட பிளைதுபாய் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது நடுவானில் விமானிகள் இடையே கடும் சண்டை நடந்தது. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி திடீரென எழுந்து, தலைமை விமானியாக (கேப்டன்) இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி கடுமையாக தாக்கினார். இதில், அவர் படுகாயமடைந்து சரிந்து விழுந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பாராட்டு எனினும், கத்திக்குத்து காயங்களுடன் இருந்தபோதும், துணிச்சலாக போராடிய மச்சார், விமானியின் கதவை திறந்து விட்டார். உடனே உள்ளே வந்த சக பயணிகள், பணியாளர்கள் சக விமானியை தடுத்து, கயிற்றை கொண்டு கட்டிப்போட்டனர். இதனால், விமானத்தை தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. 174 பயணிகள் உயிர்தப்பினர். இஸ்ரேல் ஜனாதிபதி நன்றி இந்த நிலையில், இந்திய விமானி மச்சாருக்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் நன்றி தெரிவித்து கொண்டதுடன், துணிச்சலாக செயல்பட்ட பயணிகளுக்கு பதக்கம் வழங்கவும் பரிந்துரைத்துள்ளார். இதுபற்றி இஸ்ரேல் ஜனாதிபதி ஹெர்ஜாக் கூறும்போது, துணிச்சலாக செயல்பட்ட 4 பயணிகளுக்கு, ஜனாதிபதி பதக்கம் பரிந்துரைக்க விரும்புகிறேன் என்றார். படுகாயத்துடன் இருந்தபோதும், விமானி அறையின் கதவை திறந்து விட்ட மச்சாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் கூறினார். யினோன் ஹேயோன், ஜிவிகா மேன்ஸ், அஸ்ஸாப் ரஜுவான் மற்றும் டாக்டர் ஷோடா மொசியாஷ்விலி ஆகிய துணிச்சலாக செயல்பட்ட 4 பயணிகளிடமும் அவர் பேசினார். இந்த சம்பவத்தில் மாற்று விமானிகள், விமானி அறையில் ஏற்பட்ட சத்தம் கேட்டு எச்சரிக்கை செய்த தலி மேன்ஸ் உள்பட சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றிகள் என்று தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/thanks-to-the-indian-pilot-medals-for-brave-passengers-israeli-president-announces




