சென்னை, மலேசியாவில் இருந்து சவுதி புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு இன்று மாலை மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 186 பேர் பயணம் செய்தனர். சென்னையில் தரையிறக்கம் இந்நிலையில், தமிழ்நாட்டின் சென்னை அருகே வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் அனுமதி கேட்டனர். இதையடுத்து, சென்னை விமான கட்டுப்பாட்டு மையம் விமானம் தரையிறங்க அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/engine-issue-forces-malaysia-airlines-flight-to-make-emergency-landing-in-chennai




