டெல்லி, தலைநகர் டெல்லியில் 3 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தலைநகர் டெல்லியின் தகுலா கவுன் பகுதியில் உள்ள 3 பள்ளிக்கூடங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் 3 பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். மேலும், 3 பள்ளிகளிலும் இருந்த மாணவர்கள் உடனடியாக பள்ளிகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். நீண்ட தேடுதலுக்குப்பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/bomb-threat-to-schools-in-delhi-police-investigation




