திருநெல்வேலி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (25.8.2026, செவ்வாய்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (25.8.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான்குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயகபேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tirunelveli-the-day-after-tomorrow-22




