சென்னை, நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘தி பாரடைஸ்’ ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் நடித்து வரும் படம் ‘தி பாரடைஸ்’. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 25-ம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் இந்நிலையில், இப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பூஜா ஹெக்டே உள்பட பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றநிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சிறப்பு பாடலுக்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘தசரா’ படத்தில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/keerthy-suresh-likely-to-feature-in-special-song-for-nanis-the-paradise




