சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் வீர நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச (5) நரசிம்மர் கோவில்களில் ஒன்றாகும். முன்பொரு காலத்தில் திருமங்கை ஆழ்வார், இந்த தலத்து நரசிம்மரை வழிபட்டு தினந்தோறும் பெண்களுக்கு அன்னதானம் அளித்ததால் மங்கையர் மடம் என இவ்வூர் அழைக்கப்படுகிறது. இந்த பெருமாளை பற்றி குலசேகர ஆழ்வார், பூதத்தாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடியுள்ளனர். இந்த பெருமாளை வழிபட்டால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என புராண வரலாறுகள் கூறுகின்றன. பிரம்மோற்சவம் இக்கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வாகன சேவைகள் நடைபெறுகின்றன. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி நரசிம்மர், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். கோயிலின் பரம்பரை ஸ்தானிக அர்ச்சகர் பாலாஜி பட்டர் தலைமையில் கல்யாண வைதீக சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் மாங்கலய்தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து புஷ்ப பல்லாக்கில் சுவாமி வீதி உலா காட்சி நடந்தது. தேரோட்டம் 9ஆம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு செங்கமலவல்லி சமேத வீர நரசிம்ம பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டபின், தேர் வடம்பிடிக்கப்பட்டது. தேர் 4 வீதிகளில் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகில் தேர் வந்தபோது, அர்ச்சனை செய்தும் ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/brahmotsavam-festival-at-mangaimadam-veera-narasimha-perumal-temple




