திண்டுக்கல், திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மனைவியை எரித்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கணவன்-மனைவி இடையே தகராறு திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவை அடுத்த ராஜலட்சுமிநகரை சேர்ந்த கணேசன் (வயது 56), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா(44). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 7.8.2019 அன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி எரித்து கொலை அப்போது ஆத்திரம் அடைந்த கணேசன் தனது மனைவி என்றும் பார்க்காமல் அமுதா மீது பெயிண்ட்டில் கலக்கப்படும் தின்னரை ஊற்றி தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அமுதா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவனுக்கு ஆயுள் தண்டனை இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி கணேசன் வழக்கை விசாரித்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-worker-who-burned-his-wife-to-death-gets-life-sentence




