அமராவதி ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் பன்றிக்குட்டிக்கு பசு மாடு ஒன்று தன் மடியில் பால் கொடுத்து அரவணைத்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. பன்றிக்குட்டி ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டம், வேல்துர்த்தி காவல் நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் இந்த அரிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. வழக்கம்போல் வாகனங்கள் மற்றும் பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த சாலையில், தாய் பன்றியை பிரிந்து பசியால் தவித்துக்கொண்டிருந்த ஒரு சிறிய பன்றிக்குட்டி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்துள்ளது. தாய் பாசம் விலங்கினங்களின் பொதுவான இயல்பின்படி, பசுக்கள் தங்களது கன்றுகளை தவிர மற்ற விலங்குகளின் குட்டிகளையோ அல்லது மனிதர்களையோ தன் மடியின் அருகே எளிதில் அனுமதிக்காது. மீறி நெருங்கினால் கால்களால் உதைக்கவோ அல்லது கொம்புகளால் முட்டவோ செய்யும். ஆனால், அங்கே ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது அந்த பன்றிக்குட்டியின் பசி துயரையும், அதன் கூக்குரலையும் கண்ட அங்கிருந்த ஒரு பசு மாடு, எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அப்படியே அமைதியாக பசியில் சுருண்டு கிடந்த அந்த சிறிய குட்டி, பசுவின் மடியில் வாய் வைத்து மளமளவெனப் பால் குடித்து தனது பசியை தீர்த்து கொண்டது. வீடியோ எடுத்த பொதுமக்கள் பொதுமக்கள் இந்த விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான காட்சியை தங்களது மொபைல் போன்களில் ஆச்சரியத்துடன் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான இணையவாசிகளை உருக வைத்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/cow-feeds-hungry-piglet-with-milk




